Saturday, April 20, 2019

ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் - எர்னெஸ்ட்ஹெமிங்வே


பொழுது மிகவும் பிந்திவிட்டிருந்தது. அனைவரும் அந்த விடுதியை விட்டு வெளியேறியிருந்தனர் ஒரு வயோதிகரைத் தவிர. மின் விளக்கினால் விழுந்த இலைகளின் நிழல் தன் மேல் படும்படி அவர் அமர்ந்திருந்தார். பகல் முழுக்கத் தூசி படிந்திருக்கும் அத்தெருவில் தூசடங்கி பனிப்படர்ந்திருந்தது. அந்த அந்தி வேளையில் அங்கே அமர்ந்திருப்பது அந்த காது கேளாதவருக்குப் பிடித்திருந்தது. இரவில் நிலவும் நிசப்தத்திலிருந்த வித்தியாசத்தை அப்போழுது அவரால் உணர முடிந்தது.

விடுதியிலுள்ள இரண்டு பணியாட்களுக்கும் தெரியும் அந்த முதியவர் குடித்திருக்கிறாரென்று. என்ன தான் நல்ல வாடிக்கையாளர் என்றாலும் போதை சற்றுக் கூடினால் பணம் தராமல் அவர் கிளம்பிவிடக்கூடும். இதை கருத்தில் கொண்டு இருவருமே அவர் மேல் ஒரு கண் வைத்தவாறு இருந்தனர்.

“சென்ற வாரம் அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார்" என்றான் அதில் ஒருவன்.
"ஏன்?”
“அவர் துயரத்தில் இருந்தார்.”
“எதனால்?”
“காரணம் ஏதுமில்லை”
“எதுவுமில்லை என உனக்கு எப்படித் தெரியும்?”
“அவரிடம் தான் நிறையப் பணம் உள்ளதே”

விடுதியின் கதவுப்பக்க சுவர் அருகே கிடந்த மேசையில் அவர்கள் இருவரும் வெளி முற்றத்தைப் பார்த்தபடி அமர்ந்தனர். காற்றில் மெலிதாக அசையும் இலைகளின் நிழல் நடுவே வீற்றிருக்கும் அக்கிழவரைத் தவிர வேறெந்த மேசையிலும் ஆளிருக்கவில்லை. ஒரு பெண்ணும் ஒரு ராணுவ வீரனும் அத்தெருவின் வழியே நடந்து சென்றனர். தெருவிளக்கின் ஒளி அவன் காலரிலிருந்த பித்தளை எண் தகட்டில் பட்டுப் பிரதிபலித்தது. அந்தப் பெண் தன் தலையைத் துணியேதும் கொண்டு மூடவில்லை. அவனது நடைக்கு ஈடு கொடுத்தபடி அவள் வேகமாக நடக்க முயன்றாள்.

“அவன் காவலாளியிடம் அகப்படுவான்” பணியாட்களில் ஒருவன் கூறினான்.
“அவரிடம் அவன் சிக்கினால் மட்டும் என்ன?”
"இத்தெருவை விட்டு அவன் விரைவில் தப்பித்தால் நல்லது. இல்லையெனில் காவலாளியிடம் நிச்சயம் பிடிபட்டுப் போவான். அவர்கள் ஐந்து நிமிடம் முன்னர் தான் அவ்வழியே சென்றனர்”

நிழலில் அமர்ந்திருந்த வயோதிகர் கண்ணாடி கோப்பையால் தன் தட்டைத் தட்டி ஒலியெழுப்பினார். இருவரில் இளையவன் அவரருகே சென்று “என்ன வேண்டும்?” என்று வினவினான்.

கிழவர் அவனைப் பார்த்து “இன்னுமொரு பிராந்தி” என்றார்.

“உங்களுக்குப் போதை முற்றிவிடும்” கிழவர் மீண்டும் அவனைப் பார்த்தார். அவன் அங்கிருந்து கிளம்பலானான்.

“முழு இரவும் அவர் இங்கு தான் இருப்பார்”  தன் சக பணியாளனிடம் கூறினான். "எனக்கு தூக்கம் வருகிறது. மூன்று மணிக்கு முன்னால் நான் உறங்கப்போவதே இல்லை. அந்த ஆள் அன்றே தற்கொலை செய்திருக்கலாம்”

அந்த பணியாள் விடுதியிலுள்ள மது அடுக்கிலிருந்து பிராந்தி புட்டியையும் ஏந்தும் தட்டையும் எடுத்துக்கொண்டு அந்த முதியவரின் மேசை நோக்கி நடந்தான். தட்டை கீழே வைத்து விட்டு, ஒரு கோப்பை நிறைய பிராந்தியை அவருக்காக ஊற்றினான்.

“போன வாரமே நீ உன்னை  மாய்த்திருக்கவேண்டும்” என்று அந்த செவிடரிடம் முனகினான். கிழவர் தன் விரல்களால் சைகை காண்பித்து
"இன்னும் கொஞ்சம்” என்றார்.

அவன் ஊற்றிய பிராந்தி, கோப்பையை நிரப்பி, தண்டின் மேல் வழிந்தோடி அடுக்கியிருந்த தட்டுகளில் முதலிலிருந்த தட்டின் மேல் சிந்தியது. கிழவர் "நன்றி” என்றார்.
மீண்டும் அந்த புட்டியை விடுதியினுள் எடுத்துச் சென்றான். பின் மற்றொரு பணியாளன் அருகே சென்று அமர்ந்துக்கொண்டான்.

“அவருக்கு போதை முற்றிவிட்டது”
"எல்லா இரவுகளையும் அவர்
போதையிலே கழிக்கிறார்”
"எதற்காக அவர் தற்கொலை செய்ய நினைத்தார்?”
"எனக்கு எப்படித் தெரியும்?”
“அதை எவ்வாறு செய்ய துணிந்தார்?”
“கயிறிட்டுத் தூக்கில் தொங்கினார்”
"அறுத்தது யார்?”
"அவருடைய மருமகள்”
“ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?”
"அவர் ஆன்மாவிற்காக பயந்து”
“பணம் எவ்வளவு இருக்கிறது அவரிடம்?”
"நிறையவே”
“அவருக்கு எண்பது வயதாவதிருக்கும்”
"எனினும் அவர் ஒரு எண்பது வயதுக்காரர் என்பதை  நான் சொல்ல வேண்டும்”

“அவர் வீட்டிற்குக் கிளம்பினால் பரவாயில்லை. நான் ஒரு போதும் மூன்று மணிக்கு முன்னால் தூங்கச் செல்வதில்லை. உறக்கத்திற்கு உகந்த நேரமா அது?”

"அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் விழித்திருக்கிறார்”

“அவர் தனியாள். நான் அப்படி இல்லை. எனக்காக படுக்கையில் காத்துக்கிடக்கிறாள் என் மனைவி”

"அவருக்கும் மனைவி இருந்திருக்கிறாள்”

“இந்த நேரத்தில் அவருக்கு ஒரு மனைவி இருந்திருந்தாலும் அவர் நிலையில் எந்த மாற்றமும் வந்திருக்கப்போவதில்லை.”

“அதெப்படி சொல்ல முடியும்? மனைவி உடனிருந்தால் அவர் தேறியிருப்பாரோ என்னவோ.”

“அவர் மருமகள் தான் அவரைப் பார்த்துக் கொள்கிறாளே. அன்று கயிறு அறுத்தது கூட அவள் தான் என்று சொன்னீரே”

“தெரியும்”

“அவரளவுக்கு வயதாக எனக்கு விருப்பமில்லை. வயதானவன் அருவருப்பளிப்பவன்.”

“எப்போதும் அல்ல. கிழவர் சுத்தமானவர். சிந்தாமல் குடிப்பார். இப்போதும் கூட, நல்ல குடி. எப்படியிருக்கிறார் பார்”

"நான் அவரை பார்க்க விரும்பவில்லை. அவர் வீட்டிற்குச் சென்றால் நல்லது. வேலை செய்வோர் மீது எந்தவொரு மதிப்பும் அவருக்கு இருப்பதாய் தெரியவில்லை“

கிழவரின் பார்வை கோப்பையிலிருந்து விலகி சதுரப்பரப்பிற்கு அப்பால் நகர்ந்து, பின்னர் பணியாளர்களிடம் சென்றது. தன் கோப்பையைச் சுட்டிக்காட்டி “இன்னுமொரு பிராந்தி” என்றார்.

அவசரத்திலிருந்த பணியாள் அவரருகே சென்றான்.

"தீர்ந்தது”

குடிகாரர்களிடமும், வெளிநாட்டினரிடமும் முட்டாள்கள் பிரயோகிக்கும் வாக்கிய ஒழுக்கம் இல்லாத நடையில் அவரிடம் பேசினான்.

"இனி ஏதுமில்லை. மூடியாயிற்று”

“இன்னும் ஒன்று”

“இல்லை. தீர்ந்தது" அவன் மேசையின் ஓரத்தைத் துண்டால் துடைத்த பின் முடியாது எனத் தலையசைத்தான்.

கிழவர் எழுந்து, தான் பயன்படுத்திய தட்டுகளை மெல்ல எண்ணினார். பின்னர் சட்டைப்பையிலிருந்து ஒரு தோல் பணப்பையை வெளியில் எடுத்தார். தான் குடித்தவற்றிற்கான பணத்தை செலுத்தி ஒரு அரை பெசட்டாவை டிப்ஸாக வைத்துவிட்டு கிளம்பினார். தெருவில் அவர் போவதை அந்த பணியாள் பார்த்துக்கொண்டிருந்தான், ஒரு முதுக்கிழவர் தட்டுத்தடுமாறி ஆனால் கண்ணியத்துடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அவனிடம் "அவரை ஏன் நீ இங்கேயே தங்கி குடிக்க விடவில்லை?” என நிதான குணமுடைய பணியாளன் கேட்டான். அந்நேரம் அவர்கள் விடுதியின் இரும்பு ஷட்டர்களை கீழ் இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள்.

"நேரம் இரண்டரைக் கூட ஆகவில்லை"

“நான் வீட்டிற்குச் சென்று படுக்கவேண்டும்”

“ஒரு மணி நேரம். அதிலென்ன இருக்கிறது?”

“அவரை விட நான் அதை அதிகம் பொருட்படுத்துகிறேன்”

“ஒரு மணி நேரம் எல்லோருக்கும் ஒன்று தான்.”

“நீயும் கிழவரைப் போலவே பிதற்றுகிறாய். அவர் ஒரு புட்டியை வாங்கி வீட்டிலேயே குடிக்கலாம்”

"அதுவும் இதுவும் ஒன்றாகாது”

“ஒன்றாகாது தான்” மணமாகியிருந்த பணியாள் ஆமோதித்தான். அநீதிக்கு துணைப்போகும் படி பேச அவனுக்கு விருப்பமில்லை. அதே சமயம் அவன் அவசரத்தில் இருந்தான்.

“பின்னர் நீ? வழக்கமான நேரத்திற்கு முன் வீடு திரும்ப உனக்கு பயமேதுமில்லையா?””

"என்னை அவமானப்படுத்த நினைக்கிறாயா?”

“இல்லை, ஆம்ப்ரே (மனிதா). வேடிக்கைகாகச் சொன்னேன்”

"இல்லை” அவசரத்திலிருந்த பணியாள் ஷட்டரை கீழிழுத்து விட்டுச் சொன்னான். “மாறாக எனக்கு நம்பிக்கை உண்டு. நான் நம்பிக்கையே உருவானவன்”

“உனக்கு இளமை, நம்பிக்கை, வேலை எல்லாம் இருக்கிறது”  மூத்த பணியாளன் கூறினான். “உன்னிடத்தில் எல்லாம் உண்டு."

"உமக்கு என்ன குறை?”

“அனைத்தும். வேலையைத் தவிர”

"என்னிடமுள்ளவை அனைத்தும் உன்னிடமும் இருக்கிறதே”

"இல்லை. எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. நான் இளைஞனுமல்ல”.

“போதும் வா. உளறுவதை நிறுத்திவிட்டு விடுதியைப் பூட்டு”

“எந்நேரமாயினும் இங்கே தங்க விரும்புவர்களில் நானும் ஒருவன்." அந்த மூத்த பணியாளன் தொடர்ந்தான். “உறைவிடங்களுக்குத் திரும்பிட நினைக்காதவர்கள். இரவுகளை கழிக்க வெளிச்சத்தை நாடுபவர்கள். இவர்களுடன் கூடே நானும் இங்குத் தங்க விழைகிறேன்.”

"நான் வீடுத் திரும்பி நேரே என் படுக்கைக்குப் போக வேண்டும்”

"நாம் இருவரும் இரு வேறு குணம் படைத்தவர்கள்” மூத்த பணியாளன் கூறினான். அவன் இப்போது வீட்டிற்குச் செல்வதற்கான  உடை உடுத்தியிருந்தான். “இளமை, நம்பிக்கை ஆகிய கூறுகள் அழகானவை என்றாலும், கேள்வி அவை பற்றியதல்ல. ஒவ்வொரு இரவும், விடுதியை மூட எனக்கு மனம் வருவதில்லை. யாராவது ஒருவருக்கு இவ்விடம் தேவைப்படக்கூடும் என்பதால்”

"ஆம்ப்ரே, இரவு முழுதும் திறந்திருக்கும் பொடெகாக்கள் உள்ளன”

"உனக்குப் புரியவில்லை. இது ஒரு சுத்தமான, மனதிற்கு இணக்கமான ஒரு விடுதி. நன்கு ஒளியூட்டப்பட்ட இடம். அதுவும் அருமையாக ஒளியூட்டப்பட்டிருக்கிறது. இலைகளின் நிழல் கூட இங்குத் தெரியும்”

“குட் நைட்” என்றான் இளைய பணியாளன்.

"குட் நைட்” என்றான் மற்றொருவன். மின் விளக்கை அணைத்து விட்டு அவன் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான்.

நிச்சயம் ஒளி தான் காரணி. ஆனாலும் ஒரு இடம் சுத்தமாகவும், புலன்களுக்கு இணக்கமாகவும் இருப்பது அவசியம். இசை தேவைப்படாது. கண்டிப்பாக உனக்கு இசைத் தேவைப்படாது. ரா பொழுதுகளில் ஏதோ ஒரு விடுதி மட்டும் திறந்திருக்கிறது என்பதற்காக அதன் முன்னால் கண்ணியமாக உன்னால் நிற்க முடியாது.

அவன் எதற்காக பயந்தான்? பயமும் அல்ல பீதியும் அல்ல. அது அவனுக்கு நன்கு பரிச்சயமான ஒரு உணர்வு - இன்மை. சகலமும் இன்மை, மனிதனும் இன்மையே. அது மட்டும் தான். கொஞ்சம் வெளிச்சம், சுத்தம் கூடவே ஒழுக்கம் அந்த இன்மைக்குத் தேவைப்படுகிறது. சிலர் அதை உணராமலே அதில் வாழ்ந்தனர் ஆனால் அவனுக்குத் தெரியும். அது அனைத்தும் ஒன்றுமில்லாதது - நாடா. நாடா இ புயே நாடா இ நாடே புயே நாடா. ஒன்றுமில்லை பின்னர் ஒன்றுமில்லை பின்னர் ஒன்றுமில்லை.

நாடாவில் இருக்கிற எங்கள் நாடாவே, உம்முடைய நாமம் நாடா, உம்முடைய இராட்சியம் நாடா. உம்முடைய சித்தம் நாடாவில் செய்யப்படுவதுபோல் நாடாவில்  செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின நாடாவை எங்களுக்கு இன்று அளித்தருளும், எங்களுக்கு நாடா  செய்தவர்களை நாங்கள் நாடா செய்வது போல் எங்கள் நாடாகளையும் நாடா அருளும். எங்களை நாடாவில் விழவிடாதேயும், நாடாவிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.  இன்மை நிறைந்த இன்மையாளே வாழ்க! இன்மை உம்முடனே!

அவன் நகைத்துக்கொண்டே ஒரு மது விடுதி முன் நின்றான். அங்கு ஒரு பளபளப்பான ஆவியால் இயங்கும் காபி இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது.

“என்ன வேண்டும்?” மது பரிமாறுபவர் கேட்டார்.

“நாடா”

"ஓட்ரோ லொக்கொ மாஸ்" இன்னுமொரு முட்டாள் மனிதன் என்று சொல்லித் திரும்பிவிட்டார்.

“ஒரு சிறிய கோப்பையளவு வேண்டும்” என்று பணியாளன் அவரிடம் கேட்டான். “இங்கே உள்ள ஒளி பிரகாசமாகவும் மனதிற்கு இணக்கமாகவும் உள்ளது. ஆனால் விடுதி மினுக்கின்றி இருக்கிறது.”

மது பரிமாறுபவர் அவனைப் பார்த்தார் ஆனால் பதில் ஏதும் அளிக்கவில்லை. உரையாடலுக்கு ஏற்ற நேரமல்ல அது என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
"உமக்கு இன்னுமொரு கோப்பிட்டா வேண்டுமா?”
“வேண்டாம். நன்றி” பணியாளன் வெளியே கிளம்பினான்.

அவனுக்கு மது விடுதிகளும், பொடெகாக்களும் பிடிக்கவில்லை. ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட விடுதி அவை போலின்றி வேறு விதமாக இருக்கும்.

மறு யோசனை ஏதும் இல்லாமல் அவன் தன் அறைக்குச் சென்றான். படுக்கையில் வெறுமே படுத்துக் கொண்டு, பொழுது விடிந்து வெளிச்சம் வந்ததும் தூங்கிப் போனான்.

தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் , எப்படியும் இன்சோம்னியாவாக தான் இருக்கும். பலருக்கு இது இருக்கவே செய்யும்.
Tuesday, February 19, 2019

முகலாயன் - சிறுகதை

https://vishnupuramnewreaders.blogspot.com/2019/02/blog-post_93.html?m=1


எண்ணங்களாலான ரயில் மிதவேகத்திலிருந்து அபாய நிலைக்குச் சென்று சுமார் எழுபது நிமிடங்களாகிவிட்டிருந்தன. பூண்டைத் துண்டாக்கி  வகிடெடுக்கும் இடத்தில் தேய்த்தால் முடி நன்கு வளரும் என்று காவி உடுத்திய வைத்தியர் நம்பிக்கையளிக்கிறார். நீண்ட பற்களுடன் எங்கிருந்தோ நுழைந்த  ட்ராக்குலா பூண்டைக் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்கிறான். நான் ரத்த தானமளித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி நேரே ஓடி வரும் அவனை இடைமறித்து, என் கணக்கு வாத்தியார் O என அவன் முதுகில் ஒரு முத்திரை போடுகிறார்.  "O பாஸிட்டிவ் ரத்த வகுப்பினர் ஆரஞ்சு பழம் சாப்பிடாதீர்" என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய டாக்டர், நாற்பது வயதில் இறந்த செய்தித்துடுக்கு காட்சியின் முன்னணியில் ஓடுகிறது. ஆரஞ்சு பழத்தோலை கண்களருகே கசக்கி என்னை ஐந்து நிமிடம் குருடாக்கிய கண்ணன் ஓர் ஓட்டைப்பல் சிரிப்புடன் வெயிலில் நிற்கிறான். "கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல.." என இன்னும் இரும்பாக மாறாத அழகுப்பதுமை தன் தோள்களை மட்டுமே அசைத்து அவனைப் பார்த்து நடனமாடுகிறாள்.

தெரியாமல் பிருஷ்ட்டத்தால் அழுத்தப்பட்டிருக்கும் ரிமோட் பட்டன் போல மனம் சேனல்களை விடாது மாற்றிக்கொண்டே இருந்தது.

இன்றிரவு நித்திரா தேவி என்னை முழுவதும் ஆட்கொள்வாள் என நம்பி கண்களை மூடியிருந்தேன். நூலறுப்பட்ட பாசி மணிகள் போல ஏதேதோ எண்ணங்கள் என் இரவை சிதற விட்டு எட்டுத் திக்கிலும் உருண்டோடின. கனவுகள் அல்ல. காட்சிகள். என் அபோத மனம் என்றோ சேர்த்த நினைவுகளைக் கொண்டு சரியாகத் தொகுக்கப்படாத ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டு என்னை வழக்கம் போல தூங்க விடாமல் செய்தது.

"ஆள விட்டுங்கடா" என்னும் தோரணையில் நான் விடுக்கென கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணி 1.40 என்று கைப்பேசி காட்டியது. காலையில் நடேசன் எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். புரஃபசர் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதே திட்டம். எனக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணம் அவர் என் மேஜை மீது கிழிந்த நிலையிலிருக்கும் கணக்கு கைட் எழுதிய முனைவர் கங்காதர் என்பதனால் கூட இருக்கலாம்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரவிற்கும் பொறியியல் கலந்தாய்விற்கு ஏற்ப அமைய, ஒருவித அலட்சியத்துடனே எஞ்சியிருந்த விடுமுறை நாட்களைக் கழித்தேன். பகலில் தூங்கினேன், கணினியில் படம் பார்த்தேன், காந்தி பரிந்துரைப்படி ஒவ்வொரு வாய் உணவையும் முப்பத்திரண்டு தடவை நன்கு மென்று (அவர் பரிந்துரைக்காதபடி) நான்கு வேளை சாப்பிட்டேன்.

நடேசனிற்கு நான் கங்காதரிடம் உரையாடினால் மன எழுச்சி ஏற்பட்டு மாதிரி இளைஞியாக வலம் வருவேன் என்ற எண்ணம். அவர் பேச்சை என்னால் தட்ட முடியாது. பிள்ளை போல் என் பேரில் பாசம் வைத்திருந்தார். அதற்கு ஒருவகையில் என் ஜாதகம் தான் காரணம் என்ற ஐயம் எனக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு வருடம் முன், குடும்ப சோதிடரை பார்க்கச் சென்றவர், என்ன நினைத்தாரோ கிளம்பும் முன் அம்மாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டார். அதுவரையில் பக்கத்து வீட்டுப் பணக்கார அங்கிள் என்றே எனக்கு அவர் பரிச்சயம். சோதிடர் என்ன கணித்தாரோ தெரியவில்லை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் மினுங்க ஆத்மார்த்தமாய் வாழ்த்த ஆரம்பித்தார்.
“அபார யோகம் உனக்கு இருக்கு. நீ பெரிய ஆளா வருவ பாப்பா. பெரிய பதவி வகிப்ப .நீ எங்க போனாலும் செல்வம் பன்மடங்கா பெருகும்”. என் அம்மாவிடமும் அதே பரவசத்துடன் என் ஜாதகத்தின் பாராம்சம்களாக அவர் நினைப்பதைப் பற்றி சொல்லி என்  அம்மாவையும் பகற்கனவு காணச் செய்தார். "செளமி பாப்பா நிச்சயம் ஃபாரின் செட்டில்…”

அதன் பின் புத்தகங்கள், கலை இலக்கிய இதழ்களுக்கு வருடச் சந்தாக்கள் என நான் அடையப் போகும் உச்சத்திற்கு அவருடைய பங்களிப்பாக கருதும் பொருட்களை தொடர்ந்து வாங்கித்தந்தவாறு இருந்தார். தரும் முன்பு ஒரு வார்த்தை அம்மாவிடம் சொல்லிவிடுவதால்  "எதுக்குங்க இதெல்லாம், வீண் செலவு“ தவிர நடேசன் மீது எந்த வித பெரிய சங்கடமும் எதிர்ப்பும் அம்மாவிடத்தில் இருந்ததில்லை.
                                   ***

கண்ணன் இரண்டு முறை நான் கிளம்பி விட்டேனா என்ற தகவலறியும் சாக்கில் அம்மாவிடம் முதல் தடவை க்ரீம் பிஸ்கட்டும் இரண்டாம் முறை தட்டை முறுக்கும் வாய்பேசி வாங்கிச் சாப்பிட்டு விட்டிருந்தான். நான் சரியாக ஒன்பது மணிக்கு  வீட்டு வாசலில் வந்து நின்றேன். நடேசன் காரை வெளியே நிறுத்தி அரை மணி நேரமாவது இருக்கும். கண்ணன் இடது கையில் தட்டை முறுக்கை வைத்துக் கொண்டு வலக் கை விரல்களால் கார் பின்கண்ணாடியில் படிந்த தூசை கலைத்து ஒரு குதிரைப் படையையே(?)  வரைந்திருந்தான். நடேசன் நான் வந்ததை உணர்ந்து கண்ணனின் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார். “இவ்வளவு நேரம் இத கிறுக்கறதுக்கு துணிய வச்சு தூச தொடச்சிருக்கலாம்ல?” அவர் “இவ்வளவு” -இல் கொடுத்த அழுத்தம் கேட்டு சில வினாடி திகைத்து அங்கேயே நின்றேன். அதைப் புரிந்தவராய் "வா மா மின்னனனல்ல்” என்று  என்னை வரவேற்க, ஆறுதலாகவும் பின் சற்று அவமானமாகவும் இருந்தது. “இப்பவாச்சும் வந்தியே ஏறு…”

கண்ணன் அடி வாங்கிய நினைவேதுமின்றி கைகளில் சேர்ந்த தூசை இரண்டு தட்டி தட்டி கார் முன் இருக்கையில் ஒரே பாய்ச்சலில்  ஏறலானான். அவனுடைய அப்பா ஓட்டுநர் இருக்கை வழக்கத்திற்கு மாறாகச் சாய்வாக இருப்பதைக் கண்டு முணுமுணுத்துக் கொண்டே சரி செய்தார். நான் கண்ணனுக்கு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

கார் முதலில் ரிவர்ஸில் செல்ல ஆரம்பித்தது. நடேசன் அணிந்த சட்டை அன்றைய அனுகுலமான நிறத்தில் இல்லை போலும். அந்த காரில் ரிவர்ஸ் கியரும் முதல் கியரும் ஒன்றே. அழுத்தம் சற்று கூடுதலாக செலுத்தியதால் நாங்கள் பின்னோக்கி நகர்ந்தோம். கண்ணனுக்கு இது குதூகலத்தை அளித்தது. அவன் குழந்தைகளுக்கேயுரிய தொண்டையில் ஆரம்பித்து அங்கேயே முடியும் சிரிப்பை சிரித்தான், விக்கல் வருவது போல. எனக்கு ஆரஞ்சு தோல் ஞாபகம் வந்தது. ஒரு வழியாக கார் முன்னே செல்ல ஆரம்பித்தது. அதனுடன் சேர்ந்து என் எண்ணங்களின் வேகமும் மெல்லக் கூடியது.
                                    ***

அது ஒரு நீல பூச்சு பூசிய இரண்டு அடுக்கு வீடு. அரை மணி நேரம் முன்பு வரை மழை பேய்ததிற்கான தடையங்கள் தெரிந்தன. அவ்வீட்டின் வெளிச்சுவர் ஆங்காங்கே வெளுத்த நீலமாகவும் உலராத இடங்கள் அடர்ந்த நீலமாகவும் இருந்தது. கீழ்த்தள வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாம் மூடியிருந்தது.

காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்தது போல, நடேசன் அழைப்பு மணி அடிக்கும் ஒரு வினாடி முன்பு கதவுத் திறந்தது. ஒரு சிறுமி முடி தேகமெல்லாம் எண்ணையொழுக சனி நீராடலுக்குத் தயாராகிய நிலையிலிருந்தாள். அம்மா... அம்மா... அம்மா… என்று அவள் கூப்பிட்ட ஒரு அம்மா பல முறை அசிரிரியாக ஒலிக்க, அவ்வீடு எவ்வளவு காலியாக இருந்தது என்று அப்போது தான் உணர்ந்தேன். பெரிய ஹாலில் ஒரு பாயும் கலைஞர் டி.வியும் மட்டும் தான் இருந்தது. வெற்றிடத்தை நிரப்ப ஒரு வயோதிகர் கூட இல்லை. முப்பத்தைந்து வயதுமிக்க ஒரு பெண்மணி சமையலறையிலிருந்து வந்தார். கறுப்பு சுடிதாரில் இட்லி மாவின் திட்டுக்கள். "நல்லாயிருங்கீங்களா?” பதிலுக்குக் காத்திருக்காமல் "ஐயா மேல தான் இருக்கார். போங்க” என்றார்.

கண்ணன் வழி தெரிந்தவனாய் குடுகுடு வென மேலே ஓட அவனைப் பின் தொடர்ந்தோம். நடேசன் "சார்?” என்றழைத்தார். "நடேசனா? தோ வந்துடறேன்” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நாங்களிருந்த அறையில் என் கண்ணுக்குத்  தென்பட்டவையெல்லாம் புத்தகங்கள். டீப்பாயில், நாற்காலியில், தரையில் என எங்கும் பழையதும், புதிதுமாய் புத்தகங்கள், தெய்தித்தாள்கள். டீப்பாய் மீது மட்டும் புத்தகங்கள் அதன் அளவுக்கேற்றவாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.  மற்ற இடங்களில் எல்லாம் குவியலாகவே இருந்தது. நான் கணக்கு புத்தகங்கள் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று நோட்டமிட்டேன். பெரும்பாலும் வரலாறு, தத்துவ, சைவ சித்தாந்த நூல்கள். குவியல்களுக்கு நடுவே ஒரு சிகப்பு அட்டைப் புத்தகம் ஒன்று என் கண்ணில் அகப்பட்டது. நூற்றைம்பது பக்கங்களே கொண்ட மெலிந்த நூல். நூலின் தலைப்பு பெரிய வெள்ளை எழுத்துகளாலும் நூலாசிரியரின் பெயர் மிகச் சிறிய மஞ்சள் எழுத்துகளாலும் அச்சிடப்பட்டிருந்தது.
“முகலாயர்” “வ.கங்காதர்”

அந்தக் குவியலில் ஐந்து பிரதிகளுக்கு மேல் அந்தப் புத்தகம் கிடந்தது எனக்கு சந்தேகத்தை எழுப்பியது. “இது இவரா எழுதினார்?” நடேசன் "ஆமா” என்றார். எனக்கு ஒவ்வாத கணக்கு கைடு எழுதிய Dr. V.கங்காதர் PhD யையும் என் சிறந்த குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றைப் படைத்த வ. கங்காதரையும் என்னால் ஒரே பாத்திரமாக பார்க்க முடியவில்லை. "இத இல்லையா நீங்க முன்னாடி சொல்லியிருக்கனும்?!”

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கிடைத்த சலுகைகளில் ஒன்று பள்ளி நூலகத்தில் இரண்டு வாரத்திற்க்கொருமுறை ஒரு நூல் எடுக்கலாம். நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த புத்தகம்  ஒல்லியாகவும் எனக்குப் பிடித்த நிறத்தில் அதன் அட்டை இருந்ததினாலும் ஸ்டாம்பு அச்சு பெற்று வீட்டிற்கு உற்சாகத்தோடு எடுத்து வந்தேன். படங்கள் எதுவும் இல்லாமல் வாசித்த முதல் புத்தகம் என்பதால் மலைப்பாகயிருந்தது. பின்பு சற்று சிரம் கொண்டு முப்பதுப் பக்கங்களை தாண்டிய பின் முழு வீச்சோடுப் படித்து முடித்தேன். முகலாய அரசர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனைவாக எழுதப்பட்டிருந்த சிறுகதைத் தொகுப்பது. நான் வாசிக்கையில் அம்மா பாதாமையும் ஏலக்காயையும் அரைத்து பாலில் கலந்துக்கொடுக்க, வாசமும் சொற்களும் ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டு என் நினைவில் தங்கிவிட்டிருந்தன.  சொற்கள் மங்கலாகவும் ஏலக்காய் வீச்சு சற்றுத் தூக்கலாகவும் மனதை நிறைத்து பதினேழு வயதிலேயே எனக்குள் நாஸ்டால்ஜியாவை துளிரச் செய்தது.

ஆவலும் பதட்டமும் உருவாய் நான் கங்காதர் வரும் திசையைப் பார்த்திருந்தேன். பனியனும் வேட்டியும், வெள்ளை தாடியும், பெரிய கண்ணாடியும், உலகத்தில் இனி என்ன நடந்தாலும் தன்னைப் பாதிக்காது என்ற பாவனையுமாக ப்ரஃபசர் மெல்ல நடந்து வந்து புத்தக குவியலை அப்புறப்படுத்தி நாற்காலியில் அமர்ந்தார். சைகையால் எங்களை அமரச் சொல்ல, நடேசன் வேறிரண்டு குவியல்களை விலக்கி அவர் வேண்டுகோளுக்கு  இணங்க வழிசெய்தார்.

“கண்ணா வாடா” என கண்ணனைத் தூக்கி அவர் மடியில் வைக்க முயல, அவன் துள்ளிக்குதித்து என்னருகே வந்தமர்ந்தான். "கையில என்ன?” கண்களை சுருக்கி நூலை இறுக்கிப் பிடித்திருந்த என் கைகளை பார்த்தவர், பார்வையை உயர்த்திக் குழம்பியவராக நடேசனிடம் “யாரிது?” என்று கேட்டார்.

“செள -செளமித்ரா” என்றேன்.

“அது ஆணின் பெயராச்சே.”

"அப்பா வங்காள சினிமா பார்ப்பார்”

“ஆங்... செளமித்ரா சாட்டர்ஜி. ரேவோட படங்கள் - ல நிறைய நடிச்சிருந்தாலும் அப்புவா நடிச்சது தான் எனக்குப் பிடிச்சிருந்தது.  நல்ல வங்காள முகம். உருண்டையான கண்கள். உருளையான கண்ணங்கள்..”

ஒரு நிமிடம் என் முகத்தை உற்றுப் பார்த்தார். அப்பார்வை சிறிய கண்களும் ஒடுங்கிய  கண்ணங்களும் கொண்ட என்னை என் பெயருக்கு நான் அருகதையற்றவள்ளோ என்ற ஐயத்தை எழுப்பியது.

“இராமயணத்தில சுமித்ராவின் மகன் லட்சுமணன் - அதனால செளமித்ரன்னும் ஒரு பெயரிருக்கு” என்றார்.

நான் தலையசைத்தேன்.

"இங்க பிரச்சினையில்ல. பெண் பெயர் மாதிரி தான் தெரியும். நம்ம ஊரில செளமித்ராணு ஒரு ஆண் வந்தாதான் எல்லாரும் முழிப்பாணுங்க” என்று சிரித்தார்.

நான் சொல்வதறியாது கண்களைத் தாழ்த்தி என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். அன்றே நூலகத்தில் நான் பின்னட்டையை கவனித்திருந்தால் அதை இருந்த இடத்திலே வைத்திருப்பேன். கடைசி முகலாய மன்னனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்படும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் -  நலிவுற்ற பகதூர் ஷா சஃபர் உயிர்த் துளைக்கும் பார்வையுடன் நம்மை உற்று நோக்கியவாறுப் படுத்திருப்பார். கருஞ்சிலையின் கண்கள் போல் அச்சுறுத்திய அசைவற்ற விழிகள் எனக்கு அந்த வயதில் பலவித கனவுகளையளித்திருக்கிறது. அதுவரை தனியறையில் எவ்வித பயமுமின்றி உறங்கியவள் என் பாட்டியுடன் தூங்க ஆரம்பித்தேன்.

"அந்த புத்தகத்த நீயே வச்சிக்கோ. போட்ட இருநூறு பிரதிகள்-ல உற்றார் உறவினர் கொடுத்தது போக நூத்தம்பது எங்கிட்ட அப்படியே இருக்கு”

“நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்.”

"அப்படியா. சரி” அவர் கூறிய தொனியில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.

அவரிடம் எப்படிச் சொல்வது - பாபர் லோடியை பானிப்பட் போரில் வீழ்த்தும் போது நான் களத்தில் செயலற்று நின்று பார்த்திருந்தேனென்று. அக்பர் ஆக்ராவிலிருந்து ஃபத்தேப்பூர் சிக்ரிக்கும், ஃபத்தேப்பூர் சிக்ரியிலிருந்து லாகூரிருக்கும், லாகூரிலிருந்து மீண்டும் ஆக்ராவிற்கும் தலைமையகத்தை மாற்றும் போது அவர் அரண்மனை குடிகளில் ஒருத்தியாய் நானும் அலைக்கழிக்கப்பட்டேனென்று. ஜஹாங்கிர்  சொந்த மகனான குஸ்ராவை குருடாக்கிய போது தான் பெற்ற மகனைத் தீண்டியது போல் இதயம் பதறியதென்று. தன்னிலை மறந்து ஹிரா பாய் மாங்கனியைப் பறித்த போது மனதைத் தொலைத்தது ஒளரங்கசப் மட்டுமல்ல என்று. அழிவு உறுதி என்றானபின் பகதூர் ஷா சஃபர் மகள் குல்சுமை பிரியும் தருவாயில் கண்கள் எப்படிக் கலங்கியதென்று...

“ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்திருக்கா. இஞ்சினியரிங் சேரலாம்னுட்டு இருக்கா...” நடேசன் சொல்லத் தொடங்கினார்.

கங்காதர் என்னிடம் “கட்-ஆஃப் மார்க் எவ்வளவு?”

“192.75”

"எதில போய்டுச்சு?”

“கணக்கு”

“எத்தனாவது நாள் கெளன்சலிங்?”

“அஞ்சு”

"பெரிய காலேஜ் ஒன்னும் தேராது”

என் வகுப்பினருக்கு ஒதுக்கீடு உண்டு. ஒரு வேகத்தில் வாய் வரைக்கும் வந்துவிட்டது நல்ல வேளை ஓசை ஏதும் எழவில்லை.

“உனக்கு எதில ஈடுப்பாடு?”

"வரலாற்றாய்வு”

"சுத்தம்...”

எனக்குத் தொண்டையில் ஏதோ கனத்தது. இவர் கணக்கு கைடு எழுதிய கங்காதரே தான்.

என் படிப்பாற்றல் விலைபோகாததால் நடேசன் என்னுடைய வேறு ஒரு சிறப்பை எடுத்துவிட்டார் “லட்சுமி யோகம், சரஸ்வதி யோகம் இரண்டும் இருக்கு இவ ஜாதக்கத்தில்..”

கங்காதர் ஆர்வம் வந்தவராய் "அதெப்படி?” என்றார்.

"ஒன்பதில குருவும், சுக்கிரன், குரு, புதன் கேந்திர திரிக்கோணத்திலயும் அமஞ்சிருக்கு. குரு உச்சத்தில இருக்கார்...”

"அட” கங்காதர் என்னை அதிசயப் பிறவி போல் பார்த்தார். ஆச்சரியம் தணியாதவராய்,  கண்ணன் கிறுக்கிக் கொண்டிருந்த ஏட்டைப் பிடுங்கி கட்டம் கட்டமாய் வரைந்தார். "இப்படியா?” எனக் கிரகங்களை நடேசன் வர்ணித்தபடி அந்தந்த கட்டங்களுக்குள் அடைத்தார். எனக்கிருந்த அதிர்ச்சி கூட கண்ணனுக்கு இருக்கவில்லை. அவன் பக்கத்திலிருந்த செய்தித்தாளை எடுத்து பெண் மந்திரிகளுக்கு மீசை வரைய ஆரம்பித்திருந்தான்.

"சுக்கிரன் அங்க இல்ல சார். இங்க …”

நடேசனுடன் தீவிரமாகக் கோள்கள் கிரகங்கள் ஆண்டு பலன்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். எந்த ஒரு எழுச்சி உரையையும் அதன் பின் அவர் எனக்களிப்பதாயில்லை. நானும் “முகலாயர்” பற்றிக் கேட்கவும் முயலவில்லை. அது என்றுமே ஏலக்காய் வீச்சுடன் என் மனதில் தங்கியிருக்கட்டும். கங்காதர் என் கணக்கு கைட் எழுதியவராகவே நினைவில் இடம்பெறட்டும். ஒரு படைப்பை பற்றிய புரிதல் படைத்தவனை விட நுகர்ந்தவனுக்கே அதிகம் உண்டோ? காட்டு யானைகளும் எழுத்தாளர்களும் தூரத்திலிருந்து ரசிக்கப் படவேண்டியவர்களோ?

“ஐந்தாம் நாள் கெளன்சலிங்னு பயப்படாதே. சீட் கிடைக்கும். எல்லாம் குரு பார்த்துப்பார்” என்று மட்டும் சொல்லி மூன்று கோப்பை ராகி மால்ட் கலந்து விருந்தோம்பல் செய்து வழியனுப்பி வைத்தார். ராகி மால்ட் என் கனத்த மனதை சற்று இலகுவாக்க உதவியது.
                                   ***

கைப்பேசி 2.15 எனக் காட்டியது. இரவு நான் மட்டுமே அரங்கிலிருக்க, என் அபோத மனம் அன்றே தொகுத்த ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டது. எண்ணை ஒழுக நின்ற கண்ணனை நான் இடுப்பில் தூக்கிவைத்து நிற்கிறேன். ஒரு கையில் க்ரிம் பிஸ்கட்டும் மறு கையில் தட்டை முறுக்கையும் மாறி மாறிக் கடித்து தின்று கொண்டிருக்கும் அவன் காரை கண்டதும் துள்ளிக் குதித்து முன் இருக்கையில் ஏறுகிறான்.  நடேசன் காரை ரிவர்சில் செலுத்த, பொடியன் என்னைப் பார்த்து விக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே கையசைக்கிறான். “முகல்-இ-அசாம்” இல் அனார்கலியாக நடித்த மதுபாலா அணிந்திருந்த அதே உடையை நான் உடுத்தியிருப்பதை உணர்ந்து என்னை நானே ரசிக்க கண்ணாடியைத் தேடுகிறேன். அதளித்த பிம்பத்தில் உடை முழுதும் இட்லி மாவு திட்டுகள் படிந்திருப்பதைக் கண்டு மனமுடைந்து அழுகிறேன். "மகளே..!” என்ற அலறல் கேட்டு பதறி நான் ஓடிச் செல்ல, ஒரு மெத்தையில்லாத மரக்கட்டிலில் பனியனும் வேட்டியும் கருப்பு-வெள்ளையுமாய் கங்காதர் காட்சியளிக்கிறார். அசைவற்ற கருஞ்சிலை கண்களுடன் வலக்கை நீட்டி “உன் ஜாதகத்தைக் கொடு” என்கிறார். அருகே சிகப்பு அட்டைக்கொண்ட சுமார் நூற்றைம்பது பிரதிகள் குவியலாய் கிடக்கின்றன.
Tuesday, June 12, 2018

Rubber, a novel by Jeyamohan


First published in 1990, Rubber is the debut novel of acclaimed writer Jeyamohan. The rise of Ponnumani, the obscure orphan to Ponnu Peruvattar, the rubber estate magnate and proud patriarch of the Peruvattar family is spanned in the nearly 200 page long book. The colossal growth of Ponnu Peruvattar is juxtaposed with the story depicting the fall of his empire.  The end of the Peruvattar stronghold stems from the wrong business decisions that Chellaiah Peruvattar, the only son of the patriarch makes. The family is further undone due to friction between its members. Therese is the detached spouse of Chellaiah who doesn’t make any attempt to hide her contempt for “lower beings”. She lives in a world of her own and is indifferent towards her sons’ waywardness and her husband’s crudeness. Of the couple’s five children, only Francis and Livy still reside with them. Francis, Peruvattar’s favourite grandson, is a school dropout and a spendthrift. He is outspoken and is often at loggerheads with his parents. Livy is a college student who is not attached to anyone and obeys his father solely out of a sense of obligation which whittles down as the family’s fortunes decline.

The interspersed tale in this narrative is the rags to riches story of Ponnu Peruvattar. The rise of Peruvattar as a larger than life figure in the Nanjil region where he establishes his Rubber estate empire, results in the falling out of the once dominating Arraikal family, said to be of royal blood lines. The injustice he meted out to the disgraced family comes to irk Peruvattar in his last days. The theme of caste- community and pride-  is the sub text on which this tale of hate and power is built upon. I must admit I’m naïve when it comes to understanding the overt influence of caste in Tamil-Malayalam society. The political and communal commentary in the novel is indeed an eye opener of sorts -  showing the stark presence of prejudice in a grim capitalist society that lacks humanity.

The novel is as much as a collection of short stories revolving around a central theme – Rubber. Barring Peruvattar, Francis and few others, the rest of the characters do not travel along the entire breadth of the novel and their presence is limited to a chapter or two. The chapters dedicated to Therese, Kandankaani and Velappa hold their own and has the traits of a short story in a book written as a novel. This style adopted by the writer is unique and he doesn’t hesitate to introduce a notable character like Velappa in one of the concluding chapters.

The ailing Peruvattar’s demise as well as the end of his family’s hold over the Rubber estate realm seem imminent as the novel draws to a close. In “Rubber”, lives are built around the all-pervasive Rubber trees. Rubber is an alien crop- foreign to the land. So is the lad who seeks refuge, Ponnumani. Subsequently, all the other crops in the region are uprooted to grow the money raking Rubber trees much like how the existing communities are displaced to make way for the ambitious Ponnu Peruvattar. Rubber is indeed a fine novel that is least pretentious in its depiction of rustic lives and the communal tensions that overpower them. 

An English translation of the book draws a blank. If only I could translate it someday... Sunday, April 1, 2018

The Sugar Rush - Books, Beatles and a Blush of poetry


It has been an eventful three months. I met some incredible people this year and they have made a dent in my universe- Kambili, the protagonist of Chimamanda Ngozi Adiche's "Purple Hibiscus", Okoye, the head of Dora Milaje, the all women security force of Wakanda in the Black panther universe, Indu, a young widow from “Amma Vandhal” who wears her heart on her sleeve and Anne Frank who, with her fiery spirit and audacious mind, continues to draw sympathy, laughter and tears from all realms and makes everyone fall irrevocably in love with her awkward charm . I finally got back to reading and it feels so good like being able to breathe normally after holding it for what seemed like ages. The first few months of 2018 have been kind indeed.

The Pantheress
It is not everyday you find a movie that checks all the right boxes and milks the moolah. I'm not the quintessential Marvel-holier-than-DC fan or the other way around. Superhero movies are fun to watch and they are probably the only reason why I like watching them off late. But something or the other always offended me. Be it racial stereotypes or the dumb blonde, I'm easily offended. Well, "Black panther" caught me off guard. The women, Okoye, Naika and Shuri held their own in a movie that pitted men of legacy against each other. Nobody tells the women to back off just because she isn't a man and the women aren't given any concession just because they are women. The movie also throws in a “what if” perspective - what if an African nation was the most powerful nation in the world, even if is an imaginary one? History has been absolutely “whitewashed” and we hardly know anything of Africa before the colonisation. Though this fictional movie didn’t exactly enlighten my knowledge of African history, it definitely did spike my curiosity. I haven't acted upon it yet but coincidentally I was reading a book by a Nigerian author at around the same time I happened to watch the movie.

Firangipani, so Fragrant


                                            

Chimamanda Ngozi Adiche's “Purple Hibiscus” is just the kind of book you would want to read if you crave for some good chamomile tea, find a corner chair and switch to airplane mode. It felt different to discover how a teenager from a culture completely alien to us go about her daily chores; catch a glimpse of her way of life, the food she eats and her likes and dislikes in course of an intricately crafted story, in this case, the story of fifteen year old Kambili who finds true happiness and freedom in a household not her own. She begins to question the role of her conservative father in her own rich yet curfewed home. What her aunt's home lacks in riches is more than made up for by an animated atmosphere where people speak their mind and find solace in one another. The volatile politics of Nigeria involving military coups, political threats, bribery is also included in the backdrop of the story. A truly remarkable book with a beautifully woven storyline and a compelling narrative!

Life as we know it


                                         
I have always wanted to read Anjali Joseph's “Saraswati Park”. I found a second hand copy at Blossoms in a good condition and lunged at it.  It is a good book describing the lives of a middle class couple who share their home with a young relative in a quaint neighborhood in suburban Mumbai. The plot is paced slowly so that you might truly savour the writer’s vivid depictions of the everyday mundane. Reading it is an insightful, intimate experience but at times you wonder whether you've outstayed your welcome.   

JeMo to the rescue!


Over the course of years, having read the likes of Ponniyin Selvan, Sivagamiyin Sabatham, Parthiban Kanavu (all by Kalki), a few works of Jeyakanthan, Jeyamohan’s Aram, Perumal Murugan’s Maadhorubaagan, two or three books of Vairamuthu and that of few other writers, I realised I’d hit a wall. I didn't know what to read in Tamil. I knew the names of the literary heavyweights and that was about it.  I felt guilty for reading only a handful of books in my mother tongue. I know it’s a common affliction among readers of my generation who have been raised to study and think in English. I must admit my penmanship in Tamil is not that great and a tad embarrassed too, thinking of it. Hey, I'm young and hopefully have some decades ahead of me. I can make up for the lost time and effort by reading and analysing books.  But what books? A friend (to whom I'll be eternally grateful to) lent me a book that stopped me in my tracks and altered my course of life. The book was written by someone I was critical of a couple of blog posts back, yes, it was Jeyamohan. And the book was நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் “Naveena Tamil Ilakiya Arimugam” (Introduction to Modern Tamil Literature). If you are interested in Tamil literature and as clueless as I was, Buy.Or.Borrow.The.Book.Now!


                                                

Jeyamohan has written the first part of book as an introduction to literary criticism and theory, giving us a general outline of the types of literature and literary movements. He also introduces us to the use of Imagery and Symbols in literature. He dwells on the need for coexistence of both commercial and realist literature without taking sides or denouncing one for the other. Be it political, science based or emotionally driven novels that sway masses, they all have a right and a reason to exist. It is not fair for a piece of literature to be criticized based on whether it is politically correct or not.  Literature is not meant to be curtailed by such ordinary bias.
                                              


The second half of the book is the answer to all our prayers. He outlays the history of Modern Tamil literature by introducing us to writers and their contributions in order of the generation the writer belongs to. He draws our attention to the writers’ techniques, their strengths and weaknesses if any and lists their notable works. You don't have to painstakingly jot down all the books he has mentioned as you read though. The last section of the book has all his recommendations put together. The list is exhaustive and I’m dumbstruck as to how the author managed to read so many books. Inspirational!

Amma comes callingAmma Vandhal” (Mother has come) by T. Janakiraman is a true classic that leaves you pondering over it for a long time after you are done reading. The titular Amma has a mysterious countenance about her that once revealed, leaves her son flummoxed and enraged. He wages a battle with himself and is repulsed by his father’s indifference to his mother’s transgressions.Thank God I didn't read the foreword written by Sukumaran until after I finished reading the rest of the book. He has given the entire story away in his piece. Maybe he felt that the novel’s use of motifs, conversations and depiction of characters outshone the plot of “Amma Vandhal” and merely knowing the story alone will not make do for any lit lover. If that were the case, I agree. A mother is a figure we normally associate the words “virtuous”, “chaste” and “pure” with. When that image is sullied, how does the world treat her?  With pure disdain of course. Amma seeks redemption by way of her pious son and fails miserably as he too cannot bear the thought of his mother crossing the sacred lakshman-rekha of absolute chastity. The book vaguely reminds me of Oscar Wilde’s play ‘Lady Windermere’s fan” wherein Lord Windermere resorts to drastic measures to protect his wife from knowing the truth about her disreputable mother. The two books deal with the common theme ‘shame’ - while the former work confronts the truth, the latter gets away by shunning it. Also, read my friend's brilliant analysis of the classic here.

Yours? Mine? 


I also read a book of poems for leisure (again credits to my benefactor). The last time I read some poetry was when I took up the meticulous task of reading Keats, Shelley and Milton for my MA exams. Pleasure morphs into pain when it’s all work and no play! The book that lifted my spirits and set them free is the late poet Gnanakoothan’s என் உளம் நிற்றி நீ “En Ullam Nitri Nee” (You reside in my heart). His repertoire is free verse and his verses are just what they claim to be - free and uninhibited. One of his poems affected me and I feel inclined to share its translation here.
Our Tamil

We speak our Tamil
You speak yours
In our Tamil,
‘Mummy’ has a place, ‘Daddy’ has a place
Whom Mummy denotes, whom Daddy denotes
Our children know it well
In Different languages, side by side
As we continue to dwell
Our language finds a place, others too
‘Nayinaa’s there, ‘Waaba’s there
‘Father’s there, ‘Mother’s there
In our Tamil,
‘Rice’, ‘Chappati’, ‘Poori’, ‘Sabzi’ are all there
In our Tamil ‘Chudidhar’s there, ‘Jibbaa’s there
Our Tamil defines our life
You speak your Tamil
By speaking your brand of Tamil
What gain have you made?
Ruled by you for years
You lost the very land you inhabited together.
Like sheep that strike each other
You lost the ocean whose tides strike the shore
The children who go to school
The mothers who take them there
The elderly who lay in their beds
The hyperactive youngsters have all been lost by you
When did it ever exist
One Tamil for everyone?
You speak your Tamil
We speak ours


I believe that the poet addresses the issue of identity through these lines. Gnanakoothan’s mother tongue was Kannada and I wonder whether there was ever an instance where he was criticized for not being a Tamilian by birth. Being a migrant now in Bengaluru with the question of my identity looming large, I feel humbled by this poem. 
When did it ever exist
One Tamil for everyone? 
No language is semantically pure without borrowed words or phrases. Nobody should be ostracized based on one’s language. A Leader of a political party in Tamil Nadu in the name of Dravidianism, is reluctant to let anyone take up leadership posts, unless they are from what he considers to be a pure Tamil background. Even if you have lived in Tamil Nadu all your life, speak fluent Tamil and are friends with everyone in the neighbourhood but speak another language at home, you are considered an outsider by him and deemed unfit to be a leader of Tamils. I’m Tamil through and through and this doesn’t make any sense to me. The “outsiders” are as Tamil as the rest of us. I must admit, in the past, I was critical of migrants who I thought didn’t put in enough effort to blend in with the locals. Now in Bengaluru, I’m a changed leaf as I realise how very difficult it is to learn a new language and how hard it is to blend in. I dream of the day I read the legendary Kuvempu’s works in his own words. But my efforts to learn Kannada are dampened by auto drivers who stop the vehicle only when I say “Anna inga niruthunga” and not “Anna illi nillisi”. Is my Kannada really that bad?

A Friend, A confidante


The last book I read this month is the Diary of a young girl by Anne Frank, I bought it on an impulse as it was on sale for Rs.11 on Kindle. The book wasn’t part of my school syllabus or my growing up years unlike my peers. I felt I’d missed out on Anne. Well, better late than never.

                                      

Anne was a fiery, vivacious teenager who didn’t think twice in pointing out right from wrong. She saw through the flimsy minds of adults, flinched at their constant tantrums, shared secret notes with her sister and fell headlong in love with a boy she didn’t like much at first. Scenes from the life of a typical teenager except that in Anne Frank’s case, all of this happened in hiding. Anne was part of the group that comprised of two Jewish families and an acquaintance, who spent nearly two years in hiding from the Nazis. Anne is a fantastic writer with a way with words. We laugh, cry, sigh, empathize with her and at times find her too hot headed. It’s not her fault for we are the trespassers, reading personal notes that she intended to edit and publish post war. Fate had other plans and she was not the one who edited it in the end. The holocaust was a horrible and ghastly event. Anne’s diary is the most affecting holocaust related work I’ve ever come across for Anne appeared to confide in me, as I read entry after entry, like how a close friend would. I'm a true admirer of Anne and her audacity. 

Give the following movies a try if you want to know more about the holocaust or World War II- Schindler’s List, Life is Beautiful, Saving Private Ryan, Inglorious Bastards, FuryThe Boy in the Striped Pyjamas and The Book Thief.

                    

Tangerine trees and Marmalade Skies


Kitty – the name Anne gave her diary. My diary had a name too, the one I wrote in 2008. I was around the same age as Anne Frank was when she started writing her diary. I named it LSD and all my entries would start with “Dear LSD…” No I didn’t name it after the drug. I had a habit of changing the expansion of LSD every month. So one month LSD stood for Lovely Spring Daisy. The next month it was Love Struck Doe and then changed to Light Saber Dust, Little Silly Dove, Lucky Son of Don and so on. I was fourteen alright! 

I did name my diary as “Lucy in the Sky with Diamonds” eventually because I happened to read about the song somewhere. I would be lying if I told you I have been listening to the Beatles right from my childhood. I was more of an “ABBA” fan. I did have ‘A Hard Day’s Night’ and ‘Rain’ in my playlist but they didn’t count much. 

                               


After doing an experimental run in with Bob Dylan and ultimately loving him, I thought I’d try the same with Beatles. On loop for a week, some 50 odd songs of the Beatles running forever, I finally settled for my favourites. “Norwegian Wood”, “While My Guitar Gently Weeps”, “Strawberry Fields Forever”, “Love Me do”,“Yellow Submarine”, “Something”, “PS I Love You”, “Eleanor Rigby”, “All you Need is Love” “Hey Jude” and of course, “Lucy in the Sky with Diamonds”.  The opening lines of LSD are sheer magic!

Picture yourself in a boat on a river
With tangerine trees and marmalade skies
Somebody calls you, you answer quite slowly
A girl with kaleidoscope eyes 
The song composed by Lennon-McCartney is both eccentric and addictive. No wonder people thought the song was an ode to the drug (It wasn't. Lennon apparently lifted the title from his son's preschool drawing)
  
The hint of tambura in LSD, the sitar in 'Norwegian Wood' and the strings in 'While My Guitar gently weeps' sound sublime. Listening to them over the week was akin to taking a quick vacation. The Beatles are pop icons and every quizzer’s favourite. I knew more about their personal lives than their music until now- a fact that I wasn't exactly proud of. Thank God the jinx is broken.

 Do see this video on the Beatles cover art by the Nerd Writer. I loved his take on it!


                                      


I know this blog post is a little crowded but I told you I was on a sugar rush. In my case, the Ides of March didn't foretell any bad event. I feel ecstatic and full of hope. Glory to God.


My sugar trail is not going to end anytime soon as I've just found out that Haruki Murakami’s “Norwegian Wood" is influenced by the Beatles' track of the same name. I think of reading it next. 

                                           


What more can I say? Books are love.